வெளியான வீடியோ… ராஜினாமா செய்யும் பாஜக நிர்வாகி

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊடகவியலாளர் மதன் பாஜகவில் இணைந்தார். இவர் மதன் டைரி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். இந்நிலையில், அவர் பாஜக நிர்வாகிகள் பெண்களிடம் அத்து மீறி நடத்துகின்றனர்.

இதற்காகவே, சென்னையில் தனி இடம் உள்ளது. இப்படி 15 பேர் பெண்களிடம் தவறாக வெளியிடும் வீடியோ உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று தமிழக பாஜக பொதுச்செயலாளராக உள்ள கே.டி. ராகவனின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து கே.டி. ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டபடி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *