தமிழிசையின் தாயார் மரணம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார். இன்று அதிகாலை உயிரிழந்த அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தமிழிசையின் தாயார் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கானாஆளுநர்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.