மிரட்டலுக்கு அஞ்சாத அரசு திமுக… அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்ட விவகாரத்தில் யாரும் உயர் நிலைக்கு வரக் கூடாது என சிலர் விஷமத்தனமாக செயல்படுகின்றனர். மிரட்டலுக்கு பணியும் அரசல்ல திமுக அரசு. அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் சட்ட விதி மீறல் இல்லை, சுட்டிக்காட்டினால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.

கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தேனுபுரீஸ்வரர் கோயில் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை ஓதுவராக நியமிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டார். இதனை ஒரு மௌனப் புரட்சி ஆக நாங்கள் கருதுகிறோம்.அறநிலையத்துறை சார்பில் கடந்த 100 நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மேலும், அவர் “இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையாக பயிற்சி பெற்ற 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் வயது மூப்பிற்கு பின்பும் கோவில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…