தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் கொரோனா அதிகமாக இருந்த பல மாவட்டங்களில் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 9ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
தற்போது, அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.