சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பதவியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 25 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனையிட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை. நான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கலில் தன்னிடம் ரூ.2 கோடியே 51 லட்சத்து 91 ஆயிரத்து 378 சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில், ரூ.8கோடி 62லட்சத்து 35 ஆயிரத்து 648 சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார்.

 லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவரது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில், அவர் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *