உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி?

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றவுடன், அண்ணாமலையை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்து கட்சி தலைமை அதிகரித்தது.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே பல மேடைகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் அதிரடியாகப் பேசி வருகிறார். அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி எனக் கூறி வருகிறார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்ணாமலை கூறி வரும் திமுகவுக்கு பாஜக தான் எதிர்கட்சி என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்டு ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர் மற்றும் 100 வார்டு கவுன்சிலர் பதவியை பிடிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.