5 பைசாவுக்கு பிரியாணி, அலைமோதிய மக்கள் கூட்டம்!

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து பிரியாணி கடை முன்பு கூட்டம் கூடியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பிரியாணி கடை முன்பு கூட்டம் கூடுவதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கையில், 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதே இந்த கூட்டத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மதுரையில் தெற்குவாசல் சுகன்யா என்ற நிறுவனம் செல்லூர் பகுதியில் புதிதாக தனது பிரியாணி கடையைத் திறந்திருக்கிறார். தன்னுடைய பிரியாணி கடையை பிரபலப்படுத்துவதற்காக பத்திரிக்கை, நாளிதழ் மற்றும் விளம்பர போஸ்டர்களில் ஐந்து பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் பிரியாணி கடை முன்பு கூட்டம் கூடினர். அவர்களில் யாரும் முக கவசம் கூட அணியவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. மேலும், மக்கள் கூட்டம் அலை மோதியதால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரியாணி கடை ஓனரை எச்சரித்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும், பிரியாணி பொட்டலங்கள் விரைவில் வழங்கப்பட்டு கடையும் மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…