இனி போட்டி உங்களுக்கும் எங்களுக்கும் தான்… அண்ணாமலை பேட்டி

மதுரை ஆத்திகுளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளரைச் சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டங்களை நடத்த உள்ளோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சித்தாந்த அடிப்படையிலான கட்சி தான் பாஜக. திமுக செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் போது மக்கள் தானாக எங்கள் பக்கம் வருவார்கள். தமிழக அரசியல் களம் பாஜக, திமுக என நகர்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறினார்.
மேலும், தனி மனித உரையாடல்களை ஒட்டு கேட்ட பெகாசஸ் விவகாரம் உண்மையல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சில குறிப்பிட்ட ஊடகங்கள் அப்படி செய்திகளை வெளியிட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.