மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்போது? அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகத் தான் நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று பரவல் அச்சம் குறையாததால் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 22 ஆம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.