கொரோனா பரவல்… தலைமைச் செயலாளரின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வந்தாலும் அடுத்த மாதத்தில் மூன்றாவது அலையால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவின் முதல் அலை நடுத்தர வயதினரையும் முதியவர்களையும் பாதித்தது. கொரோனாவின் இரண்டாவது அலை இளஞர்களை அதிகமாக பாதித்தது. இதனால் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.