திமுகவினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்… ஆர் எஸ் பாரதி அறிவிப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்களின் ஆணையை மீறி பேனர் வைப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம் என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதைக் திமுகவினர் அனைவரும் அறிவீர்கள். அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே, அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…