இந்த மழைக்கே இப்படியா… வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,காஞ்சிபுரம் திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓரிரு நாள் பெய்த கனமழைக்கே வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கனமழை தொடர்ந்தால் சென்னையின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சென்னை திருமங்கலம் மெட்ரோவின் முன்பு சாலையில் தேங்கி உள்ள வெள்ளநீர் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.