நீட் தேர்வுக்கான வயது வரம்பு என்ன?

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு இதுவரை வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அதனால், அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம், “நீட் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பை தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நிர்ணயிக்கவில்லை. இதன் காரணமாக வசதி படைத்த, பட்டப் படிப்பு படித்த, வயதானவர்கள், வேறு பணியில் உள்ளவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் கூட நீட் தேர்வை எழுதி மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். ஆகவே, நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பை 21 ஆக நிர்ணயிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்விற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.