மெட்ரோ ரயில்கள் டைமிங் எப்போது?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனால், பொது போக்குவரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகளுக்குத் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…