பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் முடிவு என்ன?

தமிழ்நாட்டில், அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக வரும் 19 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
இதனால், மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனப் பலரும் காத்திருக்கின்றனர். ஆனால், இது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
மாணவர்களின் நலனுக்காக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தனியார் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை பாதிப்பும் ஏற்படும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதால் முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.