நீட் நல்லது… பாஜக தலைவர் பேச்சு!

நீட் தேர்வு குறித்து கலவையான விமர்சனங்கள் நாள்தோறும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆளும் திமுக அரசு நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை என அதன் எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு திமுக நீட் தேர்வுக்கு எதிராக வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடி வருவதாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றது.
இந்நிலையில், இன்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு நல்லது என நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
மேலும், என்னைப் போன்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், எல்.முருகன் போன்ற ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் நீட்தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று நீட்தேர்வு நல்லது என பேசுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நீட் நல்லது என கருத்துக் கூறி இருக்கும் நிலையில் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.