அனைத்து ஊடகங்களும் பாஜக கையில்… அண்ணாமலை மிரட்டுகிறாரா?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு பாஜக தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை பேசியனார்.
அப்போது, பாஜக குறித்து ஊடகங்களில் தவறாக வரும் செய்தியை யாடும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறினார். அண்மையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. அதனை குறிப்பிட்டுச் சொன்ன அண்ணாமலை இதனால் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தும் பாஜக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இன்று(16.7.2021) அண்ணாமலை பதவியேற்கவுள்ள நிலையில், அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.