24 மணிநேரமும் மக்கள் சேவை; திறந்து வைக்கும் உதயநிதி

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
முக்கியமாக திமுக இளைஞரணித் தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் பல அதிரடிகளை நிகழ்த்தி மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறார்.
அதன்படி, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவின் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை இன்று உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இது குறித்து,எம்எல்ஏ பிரபாகர் ராஜா, ”விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த நேரத்திலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், ‘நம்ம விருகம்பாக்கம் என்ற பெயரில் செல்போன் ஆப்’ தொடங்கப்பட உள்ளது. இதிலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண்ணிலும் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது” எனக் கூறியுள்ளார்.