இளைஞர்களே வளர்ச்சிக்கான வித்துக்கள்… முதலமைச்சர் பெருமிதம்

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா சபை சர்வதேச இளைஞர் திறன் நாள் பற்றிய தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி சர்வதேச இளைஞர் திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று கடைபிடிக்கப்படும் இளைஞர் தினன் நாளிற்கு முதலமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் ‘திறன் மேம்பாட்டுத் துறை’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.