மேகதாது அணை விவகாரம்; சுமூக முடிவு எட்டப்படுமா?

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது அணையைக் கட்டி வருகிறது. இந்த அணையினால் தென் மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகமாகும் என்பதால் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஆனால், அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு விடாப்பிடியாக உள்ளது. மத்திய அமைச்சரைச் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலினும் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் சுமூக முடிவு எடுக்க மத்திய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் மேகதாது அணை விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.