தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு… ஒரு வாரத்திற்கு பின் தொடங்கிய தடுப்பூசி முகாம்கள்

இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டிய மக்கள் தற்போது அதி்க ஆர்வத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்திவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், மக்கள் ஆர்வம் காட்டினாலும் தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து குறைவாக தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. இது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் ஒரு வாரத்திற்குப் பிறகு கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.  சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் , 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது .

ஒரு தடுப்பூசி மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், இவையும் இரண்டாம் தவணை போட்டுக் கொள்பவர்களுக்கு மட்டுமே போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…