எங்கள் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி… குஷ்பு ட்விட்!
தமிழக மாநில பாஜக தலைவராக இருந்த வந்த எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று நடிகை மற்றும் பாஜக வேட்பாளருமான குஷ்பு எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.
பாஜகவின் மாநிலத் தலைவராக எல்.முருகன் இருந்த காலத்தில்தான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பாஜக நான்கு தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதுமட்டுமல்ல, சினிமா பிரபலங்கள் பலரையும் முருகன் தலைவராக பொறுப்பேற்றப்பிறகு கட்சிக்குள் கொண்டுவந்தார். மேலும், தாராபுரம் தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றுப் போனார்.
இந்த நிலையில், அவரின் உழைப்பை மதிக்கும் விதமாக பாஜக புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக பதவி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ட்விட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், டெல்லியில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் ஹீரோ முருகன் பதவி ஏற்றபிறகு, அவர் அலுவலத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் அவர் தலைவராக இருந்த பதவிக்காலம்தான் என்னை இந்த கட்சியில் இணைய வைத்தது . நான் எப்பொழுதும் அதற்காக அவருக்கு நன்றியுடன் இருப்பேன். வாழ்த்துக்கள் ஜி என்று பதிவிட்டுள்ளார்.