தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இருந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று(12.7.2021) காலை 6 மணியில் இருந்து ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரவு எட்டு மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த உணவகங்கள், தேநீர் கடைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு கார கடைகள் இன்று முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைக் உட்பட்ட நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.