நீட் தேர்வை குறித்து நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் – உதயநிதி

இந்தியா, முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுள்ள நிலையில், மருத்துவ படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசு சார்பில் நீட் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி, அப்பகுதி ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித் தொகையும், மடிக்கணினியும் வழங்கும் திட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய உதயநிதி, “நீட் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவல்ல நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பிலும் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனு அளித்துள்ளோம். ‘
திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந் தோம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.