ஆசிரியர்களுக்கு கடன் உதவி… அரசின் அதிரடி அறிவிப்பு

பள்ளி ஆசிரியர்கள் தங்களின் முக்கிய அறிவிப்புகளை பூர்த்தி செய்வதற்காக கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஆசிரியர்களுக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும்.
ஆசிரியர்கள் தங்கள் முக்கிய செலவான திருமணம் செய்யவும், புதிய பைக் மற்றும் கார் வாங்கவும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசே கடன் வழங்குவதால் வட்டியும் அதிகளவில் இருக்காது. எனவே, ஆசிரியர்கள் கடன் வாங்கி அவதிப்பட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.