ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசி வழங்க அமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதற்காக மே 2 ஆம் தேதி முதல் 18 வயதை மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்காததால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர். 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1.58 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. எனவே, ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.