அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்

தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதன் காரணமாக பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்ற ஊரடங்கில் தொற்று பரவல் அச்சம் காரணமாக 11 மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (5.7.2021) முதல் அனைத்து மாவட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேவும் அரசின் வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *