பஞ்சமி நில மீட்பு ; சிறுத்தைகளை சீண்டும் எல்.முருகன்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக அரசியல் செய்து வரக்கூடியவர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன். மத அடிப்படையில் பாஜகவும், ஜாதி அடிப்படையில் பாமகவும் மக்களை பிளவுபடுத்துகின்றன.

வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே அதிமுக இவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது என கடந்த 2019 மக்களவை தேர்தலின் போதும், 2021 சட்டமன்ற தேர்தலின் போதும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்டவர் திருமா.

அரசியல் ரீதியான எதிர்ப்பினை கடந்து சித்தாந்த ரீதியாக பாஜகவை, திருமாவளவன் தொடர்ச்சியாக எதிர்க்கிற காரணத்தினாலேயே, அவரை எதிர்கொள்வதற்காகவும், பட்டியலின மக்களையும் தாங்கள் பிரதிநிதித்துவம் படுத்துவதையும் வெளிக்காட்டவே  தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் எல்.முருகன். இவர் முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் முக்கிய பொறுப்பினை வகித்தவர் ஆவார்.

இந்த நிலையில், பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை எழுப்பியுள்ளது குறித்து பேசியுள்ள எல்,முருகன், பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்துள்ளோம்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்த விசாரணையும் அந்த வகையிலேயே ஆய்வு செய்யப்பட்டது.

எனவே, பஞ்சமி நில மீட்பு விவகாரத்தினை யாரும் பட்டா போட முடியாது” என விசிகவை சீண்டியுள்ளார் எல்.முருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *