எடப்பாடி சொன்ன குற்றங்கள் அவரது ஆட்சியில் நடந்தவை தான்… பன்னீர்செல்வம் பதிலடி

எதிர்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு தரமான நெல் மணிகளை திமுக வழங்கவேண்டும் எனத் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி வீரமணிக்கு, தி.மு.க., அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

டந்த மாதம், 29ம் தேதி, ‘தினமலர்’ நாளிதழில், வீரமணி நாற்றங்காலில், நெல் விதைகள் முளைப்பு சரியில்லை என செய்தி வெளியானது. அன்றே, வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நடவு மேற்கொள்ள, இலவசமாக நாற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விவசாயி வீரமணி வாங்கிய விதை நெல், அ.தி.மு.க., ஆட்சியில், திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் மேற்பார்வையில், விதைப்பண்ணை அமைக்கப்பட்டு, 2020 செப்., 14ல் அறுவடை செய்யப்பட்டது. அக்., 12ல், அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, விதையாக தேர்ச்சி பெற்றதாக, டிச., 3ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அறியாமல், இ.பி.எஸ்., அவசர கதியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் நடந்தவை தான். வருங்காலத்தில் உண்மையான தகவல்களைத் தெரிந்து கொண்டு எதிர்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…