கல்விக்கடனுக்கு கிரெடிட் கார்டு வழங்கி அசத்திய மம்தா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் பல அதிரடியான திட்டங்களை மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனை கிரெடிட் கார்டு மூலம் கொடுக்கும் திட்டத்தை மம்தா அறிவித்துள்ளார்.
இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்கும் இளங்கலை, முதுகலை மற்றும் பி,ஹெச்டி ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக்கடனை மாணவர்கள் திருப்பிச் செலுத்த 15 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் இந்த கடன் அட்டை திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.