சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி அளித்த தமிழக முதல்வர்!

பாளையங்கோட்டையில் சிறையில் இருந்த முத்து மனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், முத்து மனோவின் இறப்புக்கு காரணமான சிறைப் பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாளையங் கோட்டையில் சிறை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முத்து மனோ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.