’காப்பாற்றுபவர்களைக் காப்பாற்றுங்கள்’ இந்த ஆண்டுக்கான மருத்துவர் தின தீம்!

தன்னலம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் தங்கள் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொரோனா பாதித்த மக்களுக்கு இரவு பகல் பாராமல் சேவை செய்து வருகின்றனர்.

இதுவரை 1500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா பாதித்து இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ உயிர் காக்கும் உன்னத சேவையே வாழ்நாள் கடமையென செயல்படும் மருத்துவர்கள் பணி மகத்தானது.

கடினமான பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாமல் மக்கள் நலன்காக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த ‘தேசிய மருத்துவர்’ தினத்தில் எனது வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…