மீண்டும் உயர்ந்த சமையல் எரிவாயுவின் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும் 15 ஆம் தேதியும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனையடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 825 ரூபாய்க்கு இருந்த சிலிண்டரின் விலை 850 ரூபாயாக உயர்ந்துள்ளது.
3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.