ஆகஸ்ட் 1க்குப் பிறகே மாணவர் சேர்க்கை… அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா காரணமாக வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடந்து வருவதால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூலை 31 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும். தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதாக புகாரெழுந்துள்ளது.
மதிப்பெண் பட்டியல் வந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் வழக்கம் போல் இருக்கும் சேர்க்கை முறையே இப்போதும் தொடரும்” எனத் தெரிவித்தார்.