கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்த விவரம் வெளியிட்டப்பட்டது.
ஜூலை மாதம் 2 ஆவது மாதத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற காரணத்தால், ஜூலை 31 ஆம் தேதிக்கும் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியுடன் இன்று(28.6.2021) முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.