பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது.

இதனையடுத்து, தினமும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பொது மக்கள் பாதிக்கப்படும் காரணத்தால் உடனடியாக விலையைக் குறைக்க வேண்டும் என கட்சியினர் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விடுதலைச் சிறுத்தை ஆகியவை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும்.

மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியினர் உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *