சட்டசபையில் ஜெய்ஹிந்த் முழக்கம் ஒலிக்கும்… எல்.முருகன் அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் போன்ற தேச உணர்வு மிக்க வாக்கியங்களை முழங்குவார்கள் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஜெய்ஹிந்த் என்ற தேச உணர்வை திருச்செங்கோடு எம்.எல்.ஏ, இழிவுப்படுத்தி உள்ளார் என்றும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பிரிவினையைத் தூண்டும் வகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.