ஜூலை 15 வரை செல்லும் 1000 ரூபாய் பாஸ்

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருந்தது.

இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஊரடங்கு போடப்பட்ட போது, 1000 ரூபாய்க்கு பாஸ் வாங்கியவர்களுக்காக புதிய அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் “சென்னையில் அரசு பஸ்கள் இரவு 9.30 மணிவரை இயக்கப்படும். மே 16 2021 முதல் ஜூலை 15 2021 வரை பயணம் செய்யும் வகையில் 1000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு என மூன்று வகை வண்ணங்களில் இலவச பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…