அமைச்சரவையில் முதலமைச்சரின் சரவெடி அறிவிப்புகள்

தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவியின் முதல் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது.
இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் திர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் உரை வெறும் ட்ரெய்லர் தான். திமுக தேர்தல் வாக்குறுகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற நிலை மாறிவிட்டது. மீத்தேன், நியூட்ரினோ, சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டங்களை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும்.
வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களான செய்யாறு, திண்டிவனத்தில் 22,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். திருக்கோவில்களைப் புணரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிரடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.