எம்.எல்.ஏக்களுக்கு முதல்வரின் அறிவுரை

தமிழகத்தில், திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று(21.6.2021) தொடங்கியது.
அதன்படி, தமிழக 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்தக்கூட்டத்தில், பேசிய ஸ்டாலின் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும்.
மேலும்,பேரவையில் சிறப்பாக செயல்பட உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும்,துறை வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் அதிகம் கேள்விகளை எழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.