என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன்… மன்னிப்பு கேட்ட குஷ்பு

அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறார். இது விவாதப் பொருளானது. இது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்திருந்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”முதல்வர் ஸ்டாலின் வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். மாநிலங்கள்தான் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இதற்கு முன் ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக பயன்படுத்தியது இல்லை. இப்போது ஆட்சிக்கு வந்ததும் ஒன்றியம் என்று கூறுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்காக பலரும, அது எப்படி இந்தியா மூலம் மாநிலங்கள் உருவாக்கப்படும். மாவட்டங்கள் இணைந்தது மாநிலம், மாநிலங்கள் இணைந்ததுதான் இந்தியா. ஆனால் குஷ்பு இதற்கு அப்படியே எதிராக பேசுகிறார். குஷ்பு பேசுவது தவறு குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, தனது தவறை உணரந்த குஷ்பு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது தவறை ஒப்புக்கொள்ளாதவர்களை விட தவறுக்கு மன்னிப்பு கேட்பவர்கள் உயர்ந்தவர்கள். என்னுடைய ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
நான் சொன்னது தவறு. தவறான விஷயத்தை போஸ்ட் செய்துவிட்டேன். விவாதத்தின் போது அவ்வப்போது நாம் தவறு செய்வோம், பல தலைவர்கள் இதற்கு முன் இப்படி தவறு செய்துள்ளனர், நான் என்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.