உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் திமுக

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்,  உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தயாரிப்புக் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.

அக்கூட்டத்தில்,மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…