கரும்பூஞ்சைக்கு 148 பேர் மரணம்…அதிர்ச்சி அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பாதித்து குணமடைந்தவர்களையும், சர்க்கரை நோய் உள்ளவர்களையும் கரும்பூஞ்சை அதிகமாகப் பாதித்து வருகிறது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு குழுவினர் முதல்வர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து கருப்பு பூஞ்சை தடுப்புப் பணி குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ வல்லுநர்கள் கருப்பு பூஞ்சை நோயால் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 148 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது எனத் தெரிவித்தனர்.
மேலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் சென்னைக்கு மிக அருகே இருக்கும் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.