2 கோடி நிவாரணம் வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பைத் தடுக்கவும், கொரோனாவிற்குத் தேவையான சிசிச்சைகளுக்காகவும் மக்கள் தங்களால் இயன்ற நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலர் தங்களால் முடிந்த பணத்தை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

தமிழிலில் கத்தி, 2.ஓ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்த லைக்கா நிறுவனமும் தற்போது கொரோனாவிற்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் தமிழ்க்குமரன், நிருதன் மற்றும் கவுரவ் ஆகியோர் சுபாஷ்கரன் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவியை நேரில் வழங்கி உள்ளனர்.

 லைக்கா நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…