நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, மே மாதம் முதல் தவணை கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த மாதம் இரண்டாவது தவணை கொரோனா நிவாரணமும், 14 பொருட்களுடன் மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகையிம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனியில் அமைந்துள்ள 4 நியாய விலைக் கடைகள், என மொத்தம் 6 நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

நியாயவிலைக் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருள்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்பு, அங்குள்ள பொதுமக்களுக்கு பரிசுத்தொகுப்பினை வழங்கினார், அப்போது, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *