சசிகலா முயற்சி வெற்றி பெறாது…ஜெயக்குமார் உறுதி
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறாத அதிமுக எதிர்கட்சியாக பொறுப்பேற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்ற சசிகலா அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சசிகலா செல்போன் வழியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அதில், மீண்டும் அரசியலுக்கு வந்து கட்சியை மீட்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சசிகலா ஆடியோ அரசியல் செய்கிறார். சசிகலாவின் அதிமுகவை பிரித்தாளும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட தால்தான் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கூட்டணியில் இருந்துகொண்டே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.