பேருந்துகள் இயக்கபடுமா? ஆலோசனையில் முதலமைச்சர்

தமிழ்நாட்டில், மே 10 ஆம் தேதி முதல் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.
இதனால், ஜூன் 14 ஆம் தேதி முதல் தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் மதுக்கடைகள் மற்றும் தேநீர் கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இன்று(16.6.2021) ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
முதற்கட்டமாக நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கும் போது பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.