கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை
கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகள், இளைஞர் மற்றும் முதியவர்களை மட்டுமல்லாமல் கர்ப்பிணிகளையும் பாதித்து வருகிறது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவியான வித்யா (25) கர்ப்பிணியாக இருந்தார். மே மாதம் 28 ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன் மஞ்சள் காமாலையும் உறுதி செய்யப்பட்டது.
கர்ப்பிணியான இருவருக்கு தொற்றின் பாதிப்பு தீவிரமானதால், மே 30 ஆம் தேதி அறுவைச்சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அதில், அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது.
ஆனால், குழந்தைகள் மூன்றும் எடை குறைவாகவும் ஆரோக்கியம் இல்லாமலும் இருந்தது. இதனால், குழந்தைகளுக்கு திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து வித்யாவும் மீண்டுள்ளார். குழந்தைகள் மூன்றும் நலம் பெற்றுள்ளதால் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.