தெலுங்கானாவிலும் பொதுத்தேர்வு ரத்து

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறையாத நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
மாநில வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவலால் தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பிளஸ் 1 மாணவர்களும் நேரடியாக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அவர்கள் தற்போது பிளஸ் 2 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.