அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் விஜய்வசந்த் சந்திப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இன்று, சென்னையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, கன்னியாகுமரித் தொகுதி எம்.பி விஜய்வசந்த் சந்தித்து மாவட்ட கல்வி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்வசந்த், “பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
அதேபோல் தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சொல்ல ஆசிரியர்கள் எழுதும் scribe திட்டத்தின் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையை அமைச்சரிடம் வழங்கினேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான கல்வி துறை சார்ந்த கோரிக்கையையும் மாணவர்கள் நலன் சார்ந்த விசயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.